இலங்கைக்கு எதிராக, இறையான்மை பத்திரகாரர் ஒருவர் அமரிக்காவில் வழக்கு தாக்கல்!
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு
அடுத்த மாதம் முதிர்ச்சியடையும் 1 பில்லியன் டொலர் இறையாண்மைப் பத்திரத்தில், இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தாதது(Default) தொடர்பாக அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் பத்திரதாரர் ஒருவர் இலங்கை மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
எதிர்வரும் 25ஆம் திகதி முதிர்ச்சியடையும், இலங்கையின் 5.875% சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களில் $250 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வைத்திருக்கும் ஹமில்டன் ரிசர்வ் வங்கி லிமிடெட், தமது முதல் மற்றும் வட்டியை முழுமையாக செலுத்துமாறு கோரி நியூயோர்க் நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்துள்ளது.
மனுவின் உள்ளடக்கம்
இந்த மனுவில், $257.5 மில்லியன் முதல் மற்றும் வட்டியை உடனடியாக செலுத்துமாறு மனுதாரர் கோரியுள்ளார்.
இலங்கை, தனது இறையாண்மைக் கடன் செலுத்துவதை நிறுத்திவிட்டதாகவும், மேலும் இரண்டு கடன் பத்திரங்களில் பணம் செலுத்த தவறிவிட்டதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கடன் தரப்படுத்தலில் மேலும் கீழ் நோக்கி சென்ற இலங்கை





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
