சர்வதேச கடன் தரப்படுத்தலில் மேலும் கீழ் நோக்கி சென்ற இலங்கை
சர்வதேச கடன் தரப்படுத்த நிறுவனமான ஸ்டேன்டர்ட் என்ட் புவர்ஸ் ((S&P)) நிறுவனம் இலங்கையை கடன் தரப்படுத்தலில் மேலும் கீழ் நோக்கி தரப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் CC நிலையில் இருந்து “தெரிவு செய்யப்பட்ட இயல்பு நிலை”(Selective Default) வரை இலங்கையை கீழ் நோக்கி தரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
30 நாட்களுக்கு பின்னர், 2033 -2028 காலப் பகுதியில் முதிர்ச்சியடைய உள்ள இறையாண்மை பிணை முறிப் பத்திரங்களுக்கான வட்டியை செலுத்துவதை தவிர்த்துள்ளதன் அடிப்படையில், D மட்டம் வரை கீழ் நோக்கி தரப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த காலப் பகுதியில் இலங்கை அரசு இந்த வட்டிகளை செலுத்தி விடும் என எதிர்பார்க்க முடியாது என ஸ்டேன்டர்ட் என்ட் புவர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதியில் இருந்து பிச் ரேடிங்ஸ்,ஸ்டேன்டர்ட் என்ட் புவர்ஸ் ஆகிய சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்கள் இலங்கையை எதிர்மறையாக கீழ் நோக்கி தரப்படுத்த ஆரம்பித்தன.
ஸ்டேன்டர்ட் என்ட் புவர்ஸ் நிறுவனம் இலங்கை தொடர்பாக மேற்கொண்டுள்ள தரப்படுத்தல், இலங்கை வரலாற்றில் மிகவும் கீழ் மட்டத்தை நோக்கிய தரப்படுத்தலாகும்.
“Selective Default” என்பது ஒரு இறையாண்மையுள்ள நாடு அதன் நிதி கடன்களை திரும்ப செலுத்துவதை தாமதப்படுத்த மேற்கொள்ளும் தெரிவுவின் போது ஏற்படும் நிலைமையை குறிக்கின்றது.