அம்பாந்தோட்டையிலும் அநுர முன்னிலையில்..
இறுதி முடிவுகள்
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் இரண்டாம் சுற்று முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச வேட்பாளர் 3093 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 1763 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் முழுமையான முடிவுகள்
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 221,913 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 51.96 சதவீதமாகும்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 131,503 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 30.79 சதவீதமாகும்.
அத்துடன், சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 33,217 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 07.78 சதவீதமாகும்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச 26,707 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 6.25 சதவீதமாகும்.
இந்த தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 433,505 ஆகும்.
6,443 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 427,062 ஆகும்.
மேலும், 520,940 பேர் இந்த தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது அம்பாந்தோட்டை மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டது.
அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ச 278,804 வாக்குகளை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பெற்றுக் கொண்டார். இது அந்த மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் 66.17 சதவீதமாகும்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மொத்தம் 108,906 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன், இது அந்த மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் 25.85 சதவீதமாகும்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்கவுக்கு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மொத்தம் 26,295 வாக்குகள் கிடைக்கப்பெற்றதுடன் அது மொத்த வாக்குகளில் 6.24 சதவீதமாகும்.
கடந்தமுறையுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்கவின் வாக்கு வங்கி மிகப்பெரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளதுடன் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளையும் பெற்றுக்கொடுத்துள்ளது.
திஸ்ஸமஹாராமை
அம்பாந்தோட்டை மாவட்ட திஸ்ஸமஹாராமை தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 72,907 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 55,815 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 8,298 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,007 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தங்காலை
அம்பாந்தோட்டை மாவட்ட தங்காலை தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 59,117 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 28,857 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9,056 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 5,964 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
திலித் ஜயவீர 863 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
முல்கிரிகல தேர்தல் தொகுதி
அம்பாந்தோட்டை மாவட்ட முல்கிரிகல தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 41,086 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 26,614 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9,192 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 6,250 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். திலித் ஜயவீர 841 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பெலியெத்த தேர்தல் தொகுதி
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்ட பெலியெத்த தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 34,321 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 16,820 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,460 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 5,385 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
மேலும் திலித் ஜயவீர 700 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
தபால் மூல வாக்கு
இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 14,482 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 3,397 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 2,502 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 819 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
மேலும் திலித் ஜயவீர 105 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |