மாத்தறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகின...
இறுதி முடிவுகள்
மாத்தறை மாவட்டத்தின் இரண்டாம் சுற்று முடிவுகளின் அடிப்படையில் சஜித் பிரேதமதாச 4,505 விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 3,130 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.
மாத்தறை மாவட்டத்தின் இரண்டாம் சுற்று முடிவுகளின் அடிப்படையில் அநுர குமார வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
மாத்தறை மாவட்டத்தின் முழுமையான முடிவுகள் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 287,662 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 52.46 சதவீதமாகும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 147, 462 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 26.89 சதவீதமாகும்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 79, 249 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 14.45 சதவீதமாகும்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 14,962 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 2.73 சதவீதமாகும்.
இந்த தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 686,175 ஆகும். 9, 687 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 548,329 ஆகும்.
இதேவேளை, கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது மாத்தறை மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டது.
அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ச 374,481 வாக்குகளை மாத்தறை மாவட்டத்தில் பெற்றுக் கொண்டார். இது அந்த மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் 67.25% சதவீதமாகும்.
இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணி கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச, மாத்தறை மாவட்டத்தில் மொத்தம் 149,026 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் இது அந்த மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் 26.76% சதவீதமாகும்.
மேலும் மக்கள் சக்திக்கான தேசிய இயக்கம் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க மாத்தறை மாவட்டத்தில் 23,439 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட நிலையில் இது அந்த மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் 4.21% சதவீதமாகும்.
இதேவேளை 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை - 556,868 நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை - 3,782 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை - 560,650 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 652,417 ஆகவும் பதிவாகியுள்ளது.
அக்மன தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் அக்மன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 35,101 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 21,442 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 13,273 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,608 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தெனியாய தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் தெனியாய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 36,007 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 24,580 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 14,479 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 3,098 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அகுரெஸ்ஸ தேர்தல் தொகுதி
நடந்து முடிந்த, ஜனாதிபதித் தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் அகுரெஸ்ஸ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 41,067 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 21,265 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 12,154 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,678வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தெவிநுவர தேர்தல் தொகுதி
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 34,690வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 19,516 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,701வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,775 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இந்த தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் எண்ணிக்கை 64,430 ஆகும்.
968 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 63,462ஆகும்.
மேலும், 81,870 பேர் இந்த தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கம்புருப்பிட்டிய தேர்தல் தொகுதி
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் கம்புருப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 35,076 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 18,548 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 8,265 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,802 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
வெலிகம தேர்தல் தொகுதி
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் வெலிகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 42,182 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 21,248 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 10,628 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,969 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
திலித் ஜயவீர 1,064 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் எண்ணிக்கை 79,828 ஆகும்.
1279 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 78,549ஆகும்.
மேலும், 100,152 பேர் இந்த தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாத்தறை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 43,827 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 16,822 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9,661 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,489 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
திலித் ஜயவீர 1,003 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தபால் மூல வாக்கு
இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் மாத்தறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 19,712 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,088 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,041 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 543 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
திலித் ஜயவீர 259 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.