நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை
ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை, நாட்டின் பல மாகாணங்களிலும் இன்று (17) சிறப்பாக நடைபெற்றது.
ஹஜ் பெருநாள் திடல் தொழுகையில் பங்கேற்பதற்காக பல மக்கள் அதிகாலை முதல் கடற்கரையிலும் திறந்தவெளி அரங்குகளிலும் ஒன்று கூடி தொழுகையில் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் இன்று (17) காலை 6.30 மணியளவில் மௌலவி எம்.ஏ.பைசர் (மதனி) தலைமையில் இடம்பெற்றது.
பெருநாள் தொழுகைக்காக ஜின்னா மைதான திடலில் இன்று ஆண்கள், உலமாக்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்ப்பாணம் தேசியக் கல்வியற் கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் என சுமார் ஆயிரக்கணக்கானோர் அணிதிரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி - தீபன்
புத்தளம்
புத்தளம் மாவட்டத்தில் ஹஜ் பெருநாள் தொழுகையில் அதிகளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.
நோன்புப் பெருநாள் தொழுகை இன்று புத்தளம் கருப்புத்தரவை மைதானத்தில் இடம்பெற்றது.
நீராடி புத்தாடைகளை உடுத்திய வண்ணம் மக்கள் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.
சொற்பொழிவு
பறஹகதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை பறஹகதெனிய அஸ்ஸலபிய்யா கலா பீட திடலில் இடம்பெற்றது.
இதன் போது விசேட பெருநாள் தொழுகையினை மௌலவி ஹிபுலு ரஹ்மானும், மார்க்கச் சொற்பொழிவினை மௌலவி அன்சார் ரியாதிகளும் நிகழ்த்தினார்கள்.
இதன் போது பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
செயதி - ஊகி
மன்னார்
மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்றைய தினம் ஹஜ் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றது.காலை 6.45 மணிக்கு பெண்களுக்கும் காலை 7.30 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
இந்த தொழுகை மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் இடம்பெற்றது.
செய்தி - ஆஷிக்
ஹட்டன்
இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் ஹஜ்பெருநாள் தொழுகை ஹட்டன் ஜூம்மா பள்ளிவாசலில் மௌலவி சாஜகான் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
இதில் பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய பக்தர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக தொழுகையில் ஈடுப்பட்டனர்.
நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சாந்தி சமாதானம் சகவாழ்வு வேண்டியும் நாடு வளம் பெற வேண்டியும் துவா பிராத்தனையும் இடம்பெற்றது.
செய்தி - மலைவஞ்சன்
அம்பாறை
பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை (Ampara) மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றன.
இதன் போது மருதமுனை தாறுல் ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார்.இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை ,கல்முனை, சம்மாந்துறை ,நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.
இதன்பின் அனைவரும் தமது பெருநாள் வாழ்த்துக்களை தமது
உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொண்டனர்
செய்தி - ஷிஹான் பாறுக்
கிண்ணியா
கிண்ணியா (Kinniya) குறிஞ்சாக்கேனி வீசி மைதானத்தில் இன்று (17) காலை ஹஜ் பெருநாள் திடல் தொழுகை இடம் பெற்றது.
இதில் பெரும்பாலானவர்கள் தொழுகையில் கலந்து கொண்டதுடன் குத்பா பிரசங்கமும் இடம் பெற்றது.
மேலும். திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி - ஹஸ்பர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
