ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஹஜ் பெருநாள் வாழ்த்து
மானிட ஐக்கியத்தையும் சமூக நல்லிணக்கத்தின் மேன்மையையும் ஹஜ் பெருநாள் பறைசாற்றுகிறது என தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் செந்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மனிதன் தொன்மைக் காலம் தொட்டே சமய நிகழ்வுகளில் ஒன்று சேர்ந்து ஈடுபடுவதை வரலாறுகள் குறிப்பிடுகின்றன.
மானிட ஐக்கியம்
பல யுகங்கள் கடந்த பின்னரும் கூட மனிதர்கள் தாம் பின்பற்றும் சமயத்தின் தனித்துவமான வணக்க வழிபாட்டு முறைகளைப் பாதுகாக்க ஒற்றுமையோடு தம்மை அர்ப்பணித்துள்ளனர்.

ஹஜ் யாத்திரையின் ஊடாக உலகெங்கும் உள்ள இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே நோக்கத்திற்காக ஒரே இடத்தில் ஒன்றுசேர்ந்து, மானிட ஐக்கியத்தையும் சமூக நல்லிணக்கத்தின் மேன்மையையும் உலகிற்கு பறைசாற்றுகின்றனர்.
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான தெய்வீகப் பிணைப்பை சிறப்பாக எடுத்துக்காட்டும் இந்த ஹஜ் கடமையானது, மனிதர்களுக்கிடையிலான அனைத்து வேறுபாடுகளையும் மறந்து உலகின் நாற்திசைகளிலும் இருந்து வருகின்ற அனைத்து மக்களும் ஒரே விதமாக இறைவனை வணங்கும் உயர்ந்த வணக்கமாகும்.
புனித மக்கா நகரை மையமாகக் கொண்டு ஹஜ் வணக்கத்தில் ஈடுபட்டிருக்கும் யாத்திரிகர்களுக்கும் உலக வாழ் இஸ்லாம் சமூகத்துக்கும் எனது இதயபூர்வமான ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri