ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
சமூகத்தின் ஒருமைப்பாட்டிற்காக உலகம் முழுவதிலுமிருந்து முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நோக்கத்துடன் ஒரே புனிதத் தலத்தில் கூடி, பிரார்த்தனை செய்கிறார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தனது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்து செய்தியில், மனித குலத்தின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக அனைவரும் ஒரே இலக்கில் ஒன்றுபடும் ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு இலங்கை மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
உலக அமைதிக்கான சிறந்த செய்தி
அத்துடன் உலக மக்கள் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை விதைக்கும் ஹஜ் கொண்டாட்டம், உலக அமைதிக்கான சிறந்த செய்தியையும் தரும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.
மேலும் ஆன்மிக மற்றும் உலக வெற்றியை அடைய, மனிதன் சுயநலத்தை விட்டொழித்து, தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
