அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி
அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட் கடலோரப் பகுதியில் இறந்து கிடந்த 'நீண்ட மூக்கு கடல்நாய்' ஒன்றிலேயே இத்தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆபத்து மிகக் குறைவு
காட்டுப் பறவைகள் மூலம் இந்த வைரஸ் கடல்நாய்க்கு பரவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், நாட்டின் விவசாயத்துறை அல்லது பண்ணை விலங்குகளுக்கு இத்தொற்று இதுவரை பரவவில்லை என அவுஸ்திரேலிய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வனவிலங்குகளிடையே இந்நோய் பரவுவதைத் தடுப்பது கடினம் எனக் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சுகாதார ஆபத்து மிகக் குறைவாகவே உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.