நாட்டின் பல பகுதிகளில் அதிகரிக்கும் வெப்பநிலை! வெளியாகியுள்ள தகவல்
நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் அதிகளவிலான வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத் தரவுகள் தெரிவிக்கின்றன.
எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பத்துடனான வானிலை பதிவாகி வருவதுடன், வறட்சி நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலில் மேலும், நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
நாட்டின் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலை
அத்துடன், வவுனியாவில் 35.7 செல்சியஸ், அநுராதபுரத்தில் 33.7 செல்சியஸ், யாழ்ப்பாணத்தில் 33 செல்சியஸ், கொழும்பில் 31.4 செல்சியஸ் மற்றும் காலி 29.6 செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலைகள் பதிவாகியுள்ளன.

நுவரெலியாவில் நாட்டின் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலையாக 19.7 செல்சியஸ் பதிவாகியுள்ளது.
பண்டாரவளையில் 28.8 செல்சியஸ் கட்டுக்கஸ்தோட்டையில் 29.0 செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ Cineulagam
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan