நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரின் தீபாவளி பரிசு
ஆப்கானிஸ்தான் அணியின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர், ரஹ்மத்துல்லா குர்பாஸ் வீடற்றவர்களுக்கு வழங்கியுள்ள தீபாவளி பரிசு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இவர் தெருக்களில் தூங்கிக்கொண்டிருந்த வீடற்றவர்களுக்கு தீபாவளி தினமான இன்று (12.11.2023) பணத்தை விநியோகித்துள்ளார்.
Watch: Afghanistan cricketer Rahmanullah Gurbaz gives cash to homeless people sleeping on footpath in Ahmedabad.
— IndiaToday (@IndiaToday) November 12, 2023
?: (rjlove_shah)#Afghanistan #RahmanullahGurbaz #Gurbaz #Ahmedabad #Diwali #ViralVideo (@RGurbaz_21) pic.twitter.com/p01F6uAKRG
கிடைத்துள்ள பாராட்டு
அதிகாலை 3 மணியளவில் ரஹ்மத்துல்லா குர்பாஸ், அகமதாபாத்தின் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு அருகில் பணத்தை வைத்து சென்றுள்ளமை சமூக வளைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.
இதேவேளை அவரின் செயலை பெரும்பாலானோர் பாராட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
