புத்தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான தகவல்
வென்னப்புவ - கிம்புல்கான பிரதேசத்தில் நேற்று (7) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் வாடகைக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களை கைது செய்ய விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்த பொலிஸார், வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிம்புல்கல பிரதேசத்தில் நேற்று (07) மாலை ஒரு ஆணும் பெண்ணும் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தின் போது, நீர் வடிகட்டி (Water Filter) தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் இருவர் துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இனந்தெரியாத இருவர்
வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நீர் வடிகட்டும் இயந்திரத்தை பராமரிப்பதற்காக இவர்கள் இருவரும் வந்துள்ளனர்.
மேலும், வீட்டை பழுதுபார்த்து விட்டு வெளியே செல்லும் போது முகத்தை மூடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் மாரவில பிரதேசத்தில் வசிக்கும் வீட்டின் உரிமையாளரான 65 வயதுடைய பெண்ணும், நீர் வடிகட்டி உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் 45 வயதுடைய ஒருவருமே ஆவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri
