வட்டுக்கோட்டையில் வீடு புகுந்து திருடியவருக்கு விளக்கமறியல்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்பாட்டம் தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஒரு தொகை பணம் மற்றும் பொருட்களை திருடிய நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் (07) மல்லாகம் நீதிமன்றத்தில் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்பாட்டம் தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஒரு தொகை பணம் மற்றும் தொலைபேசி என்பன காணாமல் போயுள்ளது.
பணம், பொருள் மீட்பு
இதனை தொடர்ந்து இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அதே பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து களவாடப்பட்ட தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை மீட்டனர்.
இதற்கமைய, அவரை நேற்றையதினம் (07) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 32 நிமிடங்கள் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri