சஞ்சீவ மீது துப்பாக்கிச்சூடு: நாடாளுமன்றில் பகிரங்க கேள்வி - அனைத்தையும் வெளிப்படுத்த முடியாது என்கிறார் அமைச்சர்
பாதாள உலக குழுக்களை ஒடுக்குவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எனினும் அவை அனைத்தையும் நாடாளுமன்றத்திற்கு முன் வெளிப்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் கேள்வி
அளுத்கடை நீதிமன்ற வளாகத்தின் 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (19.02.2025) நாடாளுமன்றத்தில் வைத்து கேள்வியெழுப்பிய போதே இவ்வாறு பதில் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறுகையில், பாதாள உலக விவகாரங்களை கையாள்வது அரசாங்கத்திற்கு பொறுப்பு. அதனால் தான் பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்
பாதாள உலகமும், கறுப்புப் பணமும், போதைப்பொருள் கடத்தலும் இருக்க முடியாது. இதில் ஈடுபடுபவர்களில் சிலர் இலங்கையில் கூட இல்லை.
நாங்கள் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம் என்று நான் கூற விரும்புகிறேன். பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அனைத்து நடவடிக்கைகளையும் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்த முடியாது. ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் கடுமையாக தலையிடுகிறது. பாதாள உலகத்தை விட்டுவைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
