கொழும்பில் இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை!
கொழும்பு- கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளூமெண்டல் பகுதியில், நபரொருவர் கூரிய ஆயதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
கொலைக்கான காரணம்
சம்பவத்தில் 22 வயதுடைய மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்கான காரணம் மற்றும் கொலை செய்தவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வௌியாகவில்லை என கூறப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விசாரணை
இதனடிப்படையில், மரணமடைந்த நபருக்கு நேற்றிரவு தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, மனைவியுடன் புளூமெண்டல் தொடருந்து வீதிக்கு அருகில் சென்றுள்ளார்.
இதன்போது அங்கிருந்த சிலர் அவரை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மோட்டார் சைக்கிளில் வருகைதந்த சிலர் கூரிய ஆயதத்தினால் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
