மயானத்தில் கண்டெடுக்கப்பட்ட அதிநவீன துப்பாக்கி
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன மினிஊசி ரக தானியங்கி துப்பாக்கியொன்று கொழும்பு, மாதம்பிட்டிய பிரதேச மயானமொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மினி ஊஷி ரக துப்பாக்கியுடன், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, ஒரு தோட்டாக்கூடு மற்றும் மூன்று தோட்டாக்களும் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
இலங்கையில் இரவில் நடந்த மர்ம சம்பவம்! திடீரென யாருமின்றி நகர்ந்து சென்ற தொடருந்து - ஆபத்திலிருந்து தப்பிய மக்கள்
பொலிசாருக்கு தகவல் கிடைத்திருந்தபோதிலும்
கடந்த மாதம் 21ஆம் திகதி துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மஹவத்த சாமர எனும் பெயருடைய பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர், தற்போதைக்கு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் மஹவத்த சாமரவிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம், குறித்த மினிஊஷி துப்பாக்கி, மற்ற துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிசார் கூறுகின்றனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளிடம் இந்த வகை துப்பாக்கி ஒன்று இருப்பதாக கடந்த காலத்தில் பொலிசாருக்கு தகவல் கிடைத்திருந்தபோதிலும், எந்தவொரு பொலிஸ் பிரிவினராலும் அதைக் கண்டுபிடிக்க முடியாமற்போயிருந்தது.
இந்த மினி ஊஷி துப்பாக்கியை, மஹவத்த சாமரவின் நிழல்உலகக் குழுவின் உறுப்பினர்கள், ஏனைய நிழல் உலகக்குழு உறுப்பினர்களை அச்சுறுத்துவதற்காகப் பயன்படுத்தியிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam