கோட்டாபயவுக்கு எதிராக நீதிமன்று பிறப்பித்த உத்தரவு.. 14 ஆண்டுகால போராட்டத்திற்கு முதல் வெற்றி!

Gotabaya Rajapaksa Crime Law and Order
By Rakesh Jun 03, 2026 12:27 AM GMT
Report

இலங்கையில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவானது நீதிக்கான போராட்டத்திற்குக் கிடைத்த முதல் வெற்றியாகும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்ற உத்தரவின்படி, முன்னாள் ஜனாதிபதியும் அன்றைய பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச நிகழ்நிலை ஊடாகவாவது நீதிமன்றத்தில் முன்னிலையாகி, இவ்வழக்குத் தொடர்பாகச் சாட்சியமளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர்,  "கடந்த காலங்களில் இலங்கையானது முழுமையான அரச அனுசரணையுடன் பல்லாயிரக்கணக்கான மக்களை அநியாயமாகக் காணாமல் ஆக்கிய ஒரு 'குற்றவியல் நாடாகச்' செயற்பட்டது.

தமிழர் பகுதியில் அலங்கோலப்படுத்தப்பட்ட வெசாக் கூடுகள் - அநுரவின் முடிவு விரைவில் வரவேண்டும்!

தமிழர் பகுதியில் அலங்கோலப்படுத்தப்பட்ட வெசாக் கூடுகள் - அநுரவின் முடிவு விரைவில் வரவேண்டும்!

25 ஆயிரம் மக்கள் மாயம் 

குறிப்பாக, 2005ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காணாமல் போயுள்ளதாக, அரசால் நியமிக்கப்பட்ட மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையிலேயே அதிகாரப்பூர்வமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோட்டாபயவுக்கு எதிராக நீதிமன்று பிறப்பித்த உத்தரவு.. 14 ஆண்டுகால போராட்டத்திற்கு முதல் வெற்றி! | Court Order In Lalit Kugan Case

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட பொதுமக்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் வடக்கு மற்றும் கிழக்கில் தீவிரமாகப் போராடிக் குரல் எழுப்பியவர்களே லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவராவர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடிய இந்த இரு மக்கள் தலைவர்களுமே அன்றைய அரச இயந்திரத்தால் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டனர்.

அதுமட்டுமன்றி, இந்தக் கடத்தல்களுடன் தொடர்புடைய முக்கிய சாட்சியங்களும் திட்டமிட்ட முறையில் மூடிமறைக்கப்பட்டன.

மக்களைக் கடத்தி, கடத்தப்பட்டவர்களுக்காகப் போராடியவர்களையும் கடத்தி, பின்னர் அதற்குரிய சாட்சியங்களையும் அழித்த அன்றைய அரசாங்கம், இறுதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பால் தொடுக்கப்பட்ட இந்த வழக்கையும் கூட இல்லாமல் செய்யவே கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினூடாக முயன்றது.

ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அநீதி! தயாசிறி ஜயசேகர விமர்சனம்

ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அநீதி! தயாசிறி ஜயசேகர விமர்சனம்

நீதிமன்ற உத்தரவு

எனினும், வழக்குகளையோ அல்லது சாட்சியங்களையோ இனிமேலும் மறைக்கவோ, அமுக்கவோ முடியாது என்பதை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தனது தீர்க்கமான உத்தரவின் மூலம் இன்று உறுதிப்படுத்தியுள்ளதுடன், வழக்கை முடக்குவதற்குப் போடப்பட்ட சதிகளையும் முறியடித்துள்ளது.

கோட்டாபயவுக்கு எதிராக நீதிமன்று பிறப்பித்த உத்தரவு.. 14 ஆண்டுகால போராட்டத்திற்கு முதல் வெற்றி! | Court Order In Lalit Kugan Case

இவ்வழக்கில் லலித், குகன் ஆகிய இருவர் மட்டுமன்றி, கடந்த காலங்களில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட மேலும் 50 இற்கும் மேற்பட்டோரின் விவரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எனவே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாகச் சாட்சியமளிப்பதன் மூலம், இந்தச் சட்டவிரோதமான கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல்கள் மற்றும் அதன் பின்னணியில் இருந்த அரசியல் படுகொலைகள் குறித்த உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் எனப் போராடும் தரப்பினர் எதிர்பார்க்கின்றனர்.

நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவானது நீதிக்கான போராட்டத்தில் கிடைத்துள்ள ஒரு சாதகமான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்பமாகும்.

இந்த நீதிக்கான போராட்டத்தை நாம் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியான மக்கள் போராட்டங்களாகவும் எவ்வித தடையுமின்றித் தொடர்ந்து முன்னெடுப்போம். கோட்டாபய ராஜபக்ச உரிய சட்ட நடைமுறைகளின்படி நீதிமன்றத்தின் முன் சாட்சியமளித்தே தீர வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நீதி நிச்சயம் நிலைநாட்டப்படும்." என்றார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US