கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துக: இம்ரான் மகரூப்
தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் கிழக்கு மாகாணப் பட்டதாரிகளும் வழிகாட்டல் ஆலோசனை (Guide and Counseling) ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை வழங்குங்கள் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் 200க்கும் மேல் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது எனினும், தற்போது பட்டதாரிகளிடம் இருந்து கோரப்பட்டுள்ள ஆசிரியர் பதவிக்கான விண்ணப்பத்தில் கிழக்கு மாகாண பட்டதாரிகள் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர் பதவியை தெரிவு செய்ய முடியாத நிலை இணையத்தளத்தில் காணப்படுகின்றது.
வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர் பதவி
இதனால் பல பட்டதாரிகள் பாதிக்கப்படுவதோடு கிழக்கு மாகாணத்தில் உள்ள வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர் பற்றாக்குறையையும் நிவர்த்திக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
எனவே, கிழக்கு மாகாணப்பட்டதாரிகளும் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர் பதவிக்கு
விண்ணப்பிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துமாறு இக்கோரிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
