நடுவீதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் ஏற்பட்ட மரணம்
குருநாகல் தம்புள்ளை பிரதான வீதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒருவர் மற்றவரை தள்ளியதில் குறித்த நபர் வீதியில் விழுந்து வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
அப்போது வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கண்டெய்னர் லொரி மீது மோதியதில் வீதியில் விழுந்த நபர் உயிரிழந்தார்.
குருநாகல் தம்புள்ளை பிரதான வீதியின் தோரயாய பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாய்த்தர்க்கம்
சாஹிது மொஹமட் என்ற 50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில், பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த கொள்கலன் பாரவூர்தியின் சாரதி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறந்தவர் தோரயாய பகுதியைச் சேர்ந்த சஞ்சு என்ற நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பரிதாப மரணம்
சஞ்சு என்ற நபர் திடீரென முகமதுவை பிரதான வீதிக்கு தள்ளியபோது, வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கண்டெய்னர் லொரியின் பின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவத்தின் பின்னர் சஞ்சு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
