தினேஷ் ஷாப்டரின் கொலை வழக்கு:வெளிவந்துள்ள புதிய தகவல்கள்
தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் இன்று வரை சர்ச்சைகள் மற்றும் மர்மங்கள் தொடர்ந்த நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விசாரணைகளை ஆரம்பிக்கும் போதே குழுவுக்கு சில காரணங்கள் தென்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
விசாரணைகளுக்கு என்ன நடந்தது
கடந்த அரசாங்கங்களில் நடைபெற்ற விசாரணைகளின் போது விசாரணைக் குழுவுக்கு ஏதோ ஒரு வகையில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதால் விசாரணைகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனால் அழுத்தங்கள் யாரால் பிரயோகிக்கப்பட்டுள்ளன என்பது தெரியவரவில்லை.அத்தோடு சில முக்கியமாக தேவையான சீசீரிவி காணொளிகள் விசாரணைகள் குழுவால் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மேலும் அன்று இந்த விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் விட்ட தவறுகள் தொடர்பிலும் ஒழுக்காற்று நடவடிக்னை எடுக்கப்படவுள்ளது. இன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ள குழுவுக்கு பல வழிகளில் தகவல்கள் தெரியவந்துள்ளன.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி பொரளை பொதுமயான வளாகத்தினில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 3.30 மணியளவில் ர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam