புலம்பெயர் தமிழர்களுக்காக கைது செய்யப்பட்ட இருவர்: மொட்டு கட்சி பகிரங்கம்
புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காகவே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையானை சிறையில் அடைத்துள்ளனர் என மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
புதிய வருட ஆரம்பத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
டக்ளஸ்- பிள்ளையான்
இந்த நாட்டில் இருந்த 30 வருட யுத்தத்தை நிறைவு செய்வதற்கு தலைமை தாங்கிய மற்றும் அதற்கு ஒத்துழைத்த முப்படையினர் மறக்கப்பட்டுள்ளனர்.
யுத்தத்திற்கு உதவி செய்த அதுவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாது தமிழ் தரப்பில் டக்ளஸ்,பிள்ளையான் எம் பக்கம் நின்றனர்.
இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டதால் இன்று தண்டிக்கப்படுகின்றனர்.

இதனால் நாங்கள் இன்று நன்றி மறந்த நன்றியறிதல் அற்ற இனமாக மாறி விட்டோமா என்ற கேள்வியே கேட்க வேண்டியுள்ளது.
இந்த நாட்டில் பயங்கரவாத போரை முடிவுக்கு கொண்டுவர செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து அதற்கு பக்க பலமாக செயற்பட்டவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 2 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam