கொழும்பில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதிய கார்!
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து கொழும்பு நெலும்பொகுன பகுதியில் இருந்து சுதந்திர சதுக்கத்திற்கு செல்லும் வழியில் சி.சி.சி மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியின் மீது கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் அதிகாரியின் மகன் கைது
விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
மேலும் வாகனத்தை ஓட்டிச் சென்றதாக கூறப்படும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
