கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் எம்.பி உட்பட பயணிகள் பாதிப்பு
தாய்லாந்தின் பாங்கொக் நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவையைச் சேர்ந்த யு.எல். 403 என்ற விமானம் ஏறக்குறைய 10 மணி நேரம் தாமதமானதற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல விமானம் இல்லாததே காரணம் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த விமானம் நேற்று இரவு 11.37 மணிக்கு புறப்பட்டதாக கூறப்படுகிறது.
முந்தைய நாள் விமானம் தாமதமானதால் பயணிக்க முடியாமல் தவித்த பயணிகள் குழுவும் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.
விமான நிலைம்
இந்த விமானம் அதிகாலை 1.10 மணிக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு பாங்கொக்கை சென்றடைந்து பின்னர் 10.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திரும்பும்.
இரண்டு விமான நிலையங்களிலும் விமானம் புறப்படாமல் இருந்ததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பாங்கொக் விமான நிலையத்தில் பயணித்தவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியும் அடங்குவதாக விமான நிலைய வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.