உக்ரைனுக்கு பெரும் பின்னடைவு! ரஷ்யாவுக்கு அமெரிக்கா பச்சைக்கொடி
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில் போர் நிறுத்த தீர்மானத்திற்கு 93 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரவும், அமைதியான முறையில் தீர்வு காணவும் ஐ.நா. பொதுச் சபை நேற்று தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தியிருந்தது.
இந்த வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு ஆதரவாக அமெரிக்கா வாக்களித்தது.
பைடன் அரசு
அமெரிக்காவின் முந்தைய ஜோ பைடன் அரசு உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருந்தது.
மேலும், ரஷ்யாவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வந்தது.
இந்த நிலையில், அமெரிக்காவில் சமீபத்திய ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அந்நாட்டில் அமைந்துள்ள ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசு ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருக்கிறது.
ஐ.நா. பொதுச் சபை
193 உறுப்பினர்களை கொண்டுள்ள ஐ.நா. பொதுச் சபை உக்ரைன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் தாக்கல் செய்த "விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை மேம்படுத்துதல்" என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
இந்த தீர்மானத்திற்கு மொத்தம் 93 ஆதரவு வாக்குகளும், 18 எதிரான வாக்குகளும் பதிவாகின.
மேலும் 65 பேர் இதில் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
