அமெரிக்காவின் அடுத்த எதிர்காலம்: இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்ற கோகோ காஃப்
அமெரிக்க ஓபன் டெனிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் 19 வயதே ஆன கோகோ காஃப் இறுதிப் போட்டியில் வென்று கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்று அசத்தியுள்ளார்.
19 வயதான கோகோ காஃப் அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டிக்கு நுழைந்த போதே கோகோ காஃப் தொடர்பில் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.
எனினும், தரவரிசையில் முதல் இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரும் அரினா சபலென்காவை காஃப் வீழ்த்துவது கடினம் என்றே பலரும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம்
இந்நிலையில் கோகோ காஃப் 2 - 6, 6 - 3, 6 - 2 என்ற செட் கணக்கில் அரினாவை வீழ்த்தி அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
இதற்கு முன், 1999ஆம் ஆண்டு, தன் 18 வயதில் செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று சாதனை புரிந்து இருந்தார்.
அப்போது அவர் புகழ் பெற்ற மார்ட்டினா ஹிங்கிஸ்-ஐ வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை தன்னகப்படுத்தியிருந்தார்.

அவரை தொடர்ந்து தற்போது 19 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மகளிர் வீராங்கனை கோகோ காஃப் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam