இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான வரி நீட்டிப்பு
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இப்பண்ட வரியானது மேலும் 04 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் தீர்மானம்
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட பண்ட வரி செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் அடுத்த 4 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதேவேளை இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு 1 கிலோ கிராமிற்கு 50 ரூபா விசேட பண்ட வரியை இந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
குறித்த வரி 06 மாத காலத்திற்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மேலும் 04 மாதங்களுக்கு நீடிக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இந்நிலையில், நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோ கிராம் ஒன்றிற்கு 20 ரூபா என்ற விசேட பண்ட வரி முன்னதாக விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மார்ச் மாதம் முதல் உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri