கிராம சேவகர்களின் நடவடிக்கை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைத் திருத்தம் செய்யும் நோக்கில் கிராம சேவகர்கள், நாட்டிலுள்ள சகல வீடுகளுக்கும் சென்று தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்றின் நிலமை மற்றும் நாட்டின் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக வீடுகளுக்கு சென்று தகவல் சேகரிப்பதை கிராம சேவகர்கள் நிறுத்தியிருந்தனர்.
எனினும், இம்முறை கிராம சேவகர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்துள்ளனர்.
கிராம சேவகர்கள் வீடுகளுக்குச் செல்லும்போது பொதுமக்கள் வீட்டில் இல்லை என்றால், உடனடியாக கிராம சேவகர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழு மக்களுக்குத் தெரிவிக்கிறது.
வாக்காளர் பதிவு பணிகள்
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக இம்முறை வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பெயர் இடம்பெறுவது மிகவும் முக்கியமானது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் அக்டோபர் 31ஆம் திகதிக்குள் வாக்காளர் பதிவுப் பணிகளையை முடிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.





ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri

தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
