உலக நாடுகளை அச்சுறுத்தும் ரஷ்யாவின் செயல்! வலுக்கும் எதிர்ப்பு
தானிய ஏற்றுமதிக்கான ஒப்பந்தத்தை ரஷ்யா புதுப்பிக்க மறுப்பு தெரிவித்தமைக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கை தொடர்பில் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு உக்ரைன் ரஷ்யா இடையே சமரசம் ஏற்படுத்தப்பட்டு கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
ஒப்பந்தத்தை புதுப்பிக்க ரஷ்யா மறுப்பு
இந்த ஒப்பந்தம் நேற்றுடன் காலாவதியான நிலையில், தானிய ஏற்றுமதிக்கான ஒப்பந்தத்தை ரஷ்யா புதுப்பிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
இது தொடர்பில் ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவின் செயலால் உலகம் முழுவதும் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் நிலவுகின்றது.
உணவு தானிய விநியோகத்தை தடுக்க ரஷ்யாவிற்கு எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை, ரஷ்யாவின் இந்த மிரட்டலுக்கு உலக நாடுகள் நிச்சயம் அடிபணிய கூடாது.
எதேச்சதிகாரமான ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிராக துணிச்சலான அனைத்து நடவடிக்கைகளையும் உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும்.
உணவு விநியோகம்
உக்ரைனின் தானியங்களை நம்பி எகிப்து, சூடான், ஏமன், வங்கதேசம், இந்தோனேசியா, துருக்கி, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளை சேர்ந்த 40 கோடி மக்கள் உள்ளன.
ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தங்களுக்கான உணவு விநியோகத்தை தடையின்றி கோர முழு உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை தொடர பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |