ராஜபக்சக்களை இலக்கு வைக்கும் பட்டியலில் சிக்கிய நாமல் ராஜபக்ச
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை அநுர அரசு திட்டமிட்டே சிறைப்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கூறுகையில், "எயார் பஸ் கொள்வனவு விவகாரத்தில் நாமல் ராஜபக்ஷவுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கும் இடையில் மின்னஞ்சல் ஊடாகத் தகவல் பரிமாற்றப்பட்டது என்று தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பழிவாங்கல் நிகழ்ச்சி நிரல்
ஆனால் நீதிமன்ற விசாரணைகளில் அவ்வாறு ஏதும் குறிப்பிடப்படவில்லை. நீதிமன்ற விசாரணைகளில் வெளிப்படுத்தப்படாத விடயங்களைச் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் போலியான கருத்துக்களாகச் சமூகமயப்படுத்தி வருகின்றனர்.

வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவரான நாமல் ராஜபக்சவை இந்த அரசு திட்டமிட்ட வகையிலேயே சிறைப்படுத்தியுள்ளது. அரசின் இந்த அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலைச் சட்டரீதியாக நீதிமன்றம் ஊடாக எதிர்கொள்வோம். ராஜபக்ஷக்களை இலக்காகக் கொண்டே அநுர அரசு செயற்பட்டு வருகின்றது.
அரசின் ஊழல், மோசடிகள் மற்றும் சர்வாதிகாரச் செயற்பாடுகளைச் சுட்டிக்காட்டும் தரப்பினரே இவ்வாறு இலக்கு வைக்கப்படுகின்றனர்.
அரசு தனது நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்பதால் அதிகாரம் நிலையற்றது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்." என்றுள்ளார்.
YOU MAY LIKE THIS..