மேலதிக கொடுப்பனவை வழங்குமாறு கோரி அரச சித்த மருத்துவ அதிகாரிகள் போராட்டம்
அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் ஆயுர்வேத மருத்துவர்களுக்கான மேலதிக கொடுப்பனவை வழங்கக் கோரி நேற்றையதினம்(24) வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் நாடளாவிய ரீதியில் மாகாண ரீதியில் சுழற்சி முறையில் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் நேற்றையதினம்(24) வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவ அதிகாரிகள் போராட்டம்
மேலும் இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணம் - கைதடி சித்த மருத்துவ வைத்தியசாலைக்கு முன்பாகக் கவனவீர்ப்புப் போராட்டமும் இடம்பெற்றது.
இதன்போது ஆயுர்வேத வைத்தியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேலதிக கொடுப்பனவை உடன் வழங்கு, சம்பள மறுசீரமைப்பு எங்கே, நிர்வாகமே மமதை வேண்டாம், பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தா போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.










திருமணத்தில் கடைசி நேரத்தில் வரப்போகும் பெரிய ட்விஸ்ட்.. எதிர்நீச்சல் தொடர்கிறது லேட்டஸ்ட் ப்ரோமோ Cineulagam
