ஆசிய கோப்பை 2025! இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
சூப்பர் 4 சுற்றில் பங்களாதேஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிப்பெற்றதன் மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
17ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (T20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது.
லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்திய அணி
இந்தநிலையில், துபாயில் நடைபெறும் சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியில் நேற்றையதினம்(24) இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதின.

நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஸ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்தது.
இதற்கமைய, இந்திய அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா, சுப்மன் கில் இறங்கினர்.
இந்திய அணி பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 72 ஓட்டங்கள் குவித்தன. முதல் விக்கெட்டுக்கு 77 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா அரை சதம் கடந்தார். அவர் 37 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட் 75 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஷிவம் துபே 2 ஓட்டங்களும், சூர்யகுமார் யாதவ் 5 ஓட்டங்களும், திலக் வர்மா 5 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஹர்த்திக் பாண்டியா 38 ஓட்டங்களும், அக்சர் படேல் 10 ஓட்டங்களளும் எடுத்தனர்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது.
பங்களாதேஸ் அணி
இதையடுத்து, 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஸ் அணி களமிறங்கியது.

பங்களாதேஸ் அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக சைப் ஹசன் மற்றும் டான்சித் ஹசன் தமீம் களமிறங்கினர். சைப் ஹசன் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். இருப்பினும், மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பங்களாதேஸ் அணி 127 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam