இலங்கையில் உடனடியாக மற்றுமொரு தேர்தல்! அநுர தரப்பிற்கு சென்றுள்ள முக்கிய கோரிக்கை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவி விலகி உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என சில எதிர்க்கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
இரண்டு தசம் ஐந்து மில்லியன் டொலர் அரச பணம் காணாமல் போனமை, நிலக்கரி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு அரசாங்கம் பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, சர்வஜன பலய கட்சி உள்ளிட்ட இன்னும் சில காட்சிகளால் இந்த கோரிக்கையை முன்வைக்கப்பட்டுள்ளது.
மோசடியை தடுத்து நிறுத்த யாராலும் முடியவில்லை..
இவ்வாறான பல்வேறு மோசடிகள் பதிவாகி வருவதாக முன்னாள் வெளிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
நிலக்கரி மோசடி திறைசேரி மோசடி போன்ற மோசடிகளில் ஊடாக அரசாங்கத்தின் இயல்பு வெளிப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நிலக்கரி மோசடியை தடுத்து நிறுத்த எந்த ஒரு அமைச்சரினாலும் முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தனி ஒருவராக நிலக்கரி மோசடியில் ஈடுபட்டிருக்க முடியாது எனவும் அதற்கு அமைச்சர்களின் ஒப்புதல் இருந்திருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனவே ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஹேக்கிங் விவகாரத்தினால் வங்கிகள் மீதான மக்களின் நம்பிக்கை பழுதடைந்துள்ளதாகவும் இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை இலங்கையின் நிதி பாதுகாப்பு மற்றும் கடன் தரப்படுத்தல் என்பனவற்றில் இந்த ஹாக்கிங் விவகாரம் பெரும் பாதிப்பையும் சவால்களையும் ஏற்படுத்தும் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி தொடர்பில் உரிய விசாரணைகளை மத்திய வங்கி முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நிதிச் சலவையுடன் தொடர்புடைய மோசடியாளர்கள் சிலர் இணைந்து கொண்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் அளவில் நாடு எரிபொருள் பிரச்சினையை எதிர்நோக்கும் எனவும் தரமற்ற நிலக்கரி இறக்குமதியே இதற்கான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
தரம் குறைந்த நிலக்கரியை வழங்கிய நிறுவனத்திற்கு மீண்டும் சந்தர்ப்பம் எதனால் வழங்கப்பட்டது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் உடனடியாக பதவி விலகி தேர்தல் ஒன்றை நடத்தி மக்களுக்கு புதிய நிர்வாகத்தை தேர்வு செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும வலியுறுத்தியுள்ளார்.
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri