அரச விடுமுறையில் மாற்றம்! வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனம்
அதற்கமைய, அடுத்த நாளான மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, முன்னதாக மே மாதம் 2ஆம் திகதி வழங்கப்படவிருந்த விடுமுறையைத் திருத்தம் செய்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவிப்பு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தனா அபேரத்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானத்திற்கு இணங்க, இம்முறை வெசாக் வாரம் மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam