அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளுங்கள்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
மலேரியா காய்ச்சல் நாட்டிற்குள் வேகமாக பரவுவதற்கான பெரும் அபாயம் உள்ளதாக விசேட வைத்திய நிபுணர் இந்தீவரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகாதார மேம்பாட்டுப்பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலேரியா நோயாளிகள் அடையாளம்
2025-ஆம் ஆண்டில் நாட்டில் 42 மலேரியா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மலேரியா நாட்டிற்குள் பரவுவதற்கான பெரும் அபாயம் உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த நோய் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் கர்ப்பிணித் தாய்மார்களையும் மிக அதிகமாகப் பாதிக்கும். இது நமது பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
2025ல் பதிவான நோயாளிகளில் 83 சதவீதம் பேர் ஆண்கள். அவர்கள் 21 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள். அனைத்து நோயாளிகளிலும் 89 சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளனர்.
அறிகுறிகள்
இந்த மலேரியா நோயாளிகளில், 88 சதவீதம் பேர் இலங்கையர்கள். அவர்கள் தான் நாட்டிற்குள் மலேரியாவைக் கொண்டு வருகின்றார்கள். இதுவே மிகப்பெரிய ஆபத்து.
மலேரியாவின் அறிகுறிகளாக காய்ச்சல், உடல் வலி மற்றும் குளிர் நடுக்கம் ஆகும். இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்து, பயணங்களும் மேற்கொண்டிருந்தால் உடனடியாக மலேரியா பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri