தமிழக சட்டசபை தேர்தல் : வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தால் ஆட்சி மாற்றம் நடக்குமா..!

Vijay M. K. Stalin Tamil nadu Edappadi K. Palaniswami Election
By Rukshy Apr 23, 2026 11:26 PM GMT
Report

தமிழக சட்டசபை தேர்தலில் 85வீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 73வீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த முறை வாக்குப்பதிவு வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்த வாக்குப்பதிவு உயர்வு எதை உணர்த்துகிறது? வாக்குப்பதிவு அதிகரிப்புக்கும், ஆட்சி மாற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து இந்தியாவில் இருக்கும் தேர்தல் கொள்கை வகுப்பாளர்களால் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழக வரலாற்றில் 130இற்கு மேல் ஆசனங்களை பெற்று முதலமைச்சராகும் முக்கிய புள்ளி

தமிழக வரலாற்றில் 130இற்கு மேல் ஆசனங்களை பெற்று முதலமைச்சராகும் முக்கிய புள்ளி

கடந்த ஆண்டு கால ஆட்சி மாற்றம்

தமிழ்நாட்டில் மொத்தமாக 5,73,43,291 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 4.88 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூரில் 92.64வீத வாக்குகளும், சேலத்தில் 90.70வீத வாக்குகளும், தருமபுரியில் 90.14வீத வாக்குகளும், ஈரோட்டில் 90.10வீத வாக்குகளும், நாமக்கல்லில் 90வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல் : வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தால் ஆட்சி மாற்றம் நடக்குமா..! | Tamilnadu Election Change Of Government Voting

தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் இதுவரையிலான தேர்தல்களில் வாக்குப்பதிவுகளின் அடிப்படையில்,

1967 சட்டசபை தேர்தல் - 76.57வீதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதன்முறையாக திமுக வென்றது

1971 சட்டசபை தேர்தல் - 72.10வீதம் திமுக ஆட்சி தொடர்ந்தது

1977 சட்டசபை தேர்தல் - 61.58வீதம் ஆட்சி மாற்றம் நடைபெற்று முதன்முறையாக அதிமுக வெற்றி பெற்றது

1980 சட்டசபை தேர்தல் - 65.42வீதம் அதிமுக ஆட்சி தொடர்ந்தது

1984 சட்டசபை தேர்தல் - 73.47வீதம் அதிமுக ஆட்சி தொடர்ந்தது

1989 சட்டசபை தேர்தல் - 69.69வீதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது

1991 சட்டசபை தேர்தல்- 63.84வீதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அதிமுக வெற்றி பெற்றது முதன்முறையாக ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார்.

1996 சட்டசபை தேர்தல் - 66.95வீதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது

2001 சட்டசபை தேர்தல் - 59.07வீதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அதிமுக வெற்றி பெற்றது

2006 சட்டசபை தேர்தல் - 70.82வீதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது

2011 சட்டசபை தேர்தல் - 78.01வீதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அதிமுக வெற்றி பெற்றது

2016 சட்டசபை தேர்தல் - 74.24வீதம் அதிமுக ஆட்சி தொடர்ந்தது

2021 சட்டசபை தேர்தல் - 72.73வீதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது.

வாக்கு எண்ணிக்கை அதிகரிப்பு

பொதுவாக, வாக்குப்பதிவு அதிகரிக்கும்போது ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற கருத்து உண்டு.

ஆட்சி மீதான அதிருப்தி அலையால் அதிகமானோர் வாக்களிக்க உந்தப்படுவார்கள் என்பது கடந்த காலம் தேர்தல் முடிவுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது என அய்வாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் : வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தால் ஆட்சி மாற்றம் நடக்குமா..! | Tamilnadu Election Change Of Government Voting

எனினும், வாக்குப்பதிவு குறைந்தபோது ஆட்சி மாற்றமும், வாக்குப்பதிவு உயர்ந்தபோது ஆட்சி தொடர்ந்ததும் கூட நடந்துள்ளதாக குறி்ப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2021 தேர்தலிலேயே வாக்குப்பதிவு குறைந்தபோதும், அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது.

கடந்த தேர்தலில் 4.63 கோடி வாக்காளர்கள் மொத்தமாக வாக்களித்திருந்தனர். இந்த தேர்தலில் அது 4.87 கோடியாக அதிகரித்துள்ளது. சுமார் 25 லட்சம் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை அதிகரிப்பால் ஆட்சி மாற்றம் நடக்கும் எனச் சொல்ல முடியாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.   

அசாத் மௌலானாவிடம் வாக்குமூலம் : மிரட்டும் புலனாய்வு அதிகாரிகள்

அசாத் மௌலானாவிடம் வாக்குமூலம் : மிரட்டும் புலனாய்வு அதிகாரிகள்

மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US