இலங்கையில் தீவிரமாக பரவி வரும் கோவிட் தொற்று! தொற்றாளர்களின் நிலவரம் வெளியானது
நாட்டில் கோவிட் தொற்று உறுதியான மேலும் 3 ,390 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 406,675 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்,நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 2,163 பேர் குணமடைந்துள்ளனர்.அதற்கமைய, நாட்டில் இதுவரை கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 348,930 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, கோவிட் தொற்று பரவலின் ஆரம்பத்திலிருந்து 400,000 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட உலகின் 60 ஆவது நாடாக இலங்கை மாறியுள்ளது.



