வாகன இறக்குமதியில் அரசாங்கம் மோசடி : குற்றம் சாட்டும் இறக்குமதியாளர் சங்கம்
தற்போதுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது மற்றும் வாகன இறக்குமதியை அனுமதிப்பது போன்ற அரசாங்கத்தின் தொடர்ச்சியான கூற்றுக்கள் குறித்து வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் (Prasad) சந்தேகங்களை வெளியிட்டுள்ளார்.
வாகன இறக்குமதிகள் விரைவில் நடக்கும் என்று அரசாங்கம் கூறுவதோடு அதற்கு குறிப்பிட்ட திகதி எதுவும் வழங்கப்படவில்லை.
இந்நிழலயில், கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த முடியும் என்று மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.
விலை குறைப்புக்கள்
வாகன இறக்குமதியை அனுமதிப்பதில் பேருந்துகள் மற்றும் பாரவூர்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மூன்று சக்கர வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் வான்களுக்கு தாமதமாகவே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது
எனினும் வாகன இறக்குமதியின் வாக்குறுதி ஒரு சூழ்ச்சி என்று தாம் சந்தேகிப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த வாக்குறுதிகளின் மூலம் வாகனங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை எளிதாக்கும் முயற்சிகளையே அரசாங்கம் முன்னெடுத்து செல்கிறது.
இந்தநிலையில் வாகன இறக்குமதிகள் நடைமுறைக்கு வந்தாலும் குறிப்பிடத்தக்க விலை குறைப்புக்கள் சாத்தியமில்லை என்றும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் சுட்டிக்காட்டியுள்ளார்.