காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்து இலங்கையில் போராட்டம் முன்னெடுப்பு
இஸ்ரேலிய (Israel) பாதுகாப்புப் படையினரால் ரஃபா (Rafah) நகரத்தில் நடத்தப்பட்டு வரும் இராணுவத் தாக்குதலுக்கு எதிராக இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபை (UN) வளாகத்திற்கு அருகில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தை இலங்கையின் சுதந்திர பாலஸ்தீன இயக்கம் நடத்தியுள்ளது.
இந்தப் போராட்டத்தின் நிறைவில் ஐக்கிய நாடுகள் சபைக்காக கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலை
கடிதத்தில் காசாவில் இடம்பெறும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் இனப்படுகொலைச் செயல்களாகும் என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பொதுமக்கள் நேரடியாகவே இஸ்ரேலியர்களால் குறிவைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே, ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |