அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடுகின்றது
ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் காலத்திற்கு ஆட்டம் போடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். இந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளாக ஆட்சி பொறுப்பினை ஏற்றவில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த அரசாங்கம் மக்களின் பிரதிநிதிகளாக ஆட்சிபீடம் ஏறியதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆட்டம் போடும் கைப்பாவைகளாக மாறி உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் மின்சார கட்டணங்களை 33 வீதமாக குறைவதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு ஆயத்தமானதாக அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாண நிதியத்தின் அழுத்தம் காரணமாக இவ்வாறு மின்சார கட்டணத்தை அதிகரிக்க முயற்சிக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனினும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக இந்த மின்சார கட்டண அதிகரிப்பு திட்டம் கைவிடப்பட்டது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொலனறுவை பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு பல்வேறு நலன்புரி திட்டங்களை வழங்குவதாக அறிவித்த அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உர மானியங்கள் கிடைக்க பெறுவதில்லை எனவும் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்க அமைச்சர்கள் விவசாயிகளது விளைச்சலுக்கு நல்ல விலை கிடைப்பதாக கூறிய போதிலும் உண்மையில் அவ்வாறு வ கிடைக்கப்பெறுவதில்லை என சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டி உள்ளார்.



