பிளாஸ்டிக் மற்றும் லஞ்சீட் பாவனையைக் கட்டுப்படுத்த ஆளுநர் நா.வேதநாயகன் நடவடிக்கை!

Nothern Province Plastic Sri Lanka Transport Board
By Theepan Jun 16, 2026 01:33 PM GMT
Report

எதிர்காலத்தில் பொலித்தீன் மற்றும் ஒரு நாள் பாவனைக்குரிய பிளாஸ்டிக் கப்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.

போக்குவரத்து அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் செயலகத்தில் இன்று(16.06.2026) நடைபெற்றுள்ளது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ் சலேவின் மடிக்கணினிக்குள் மறைக்கப்படும் முக்கிய ஆதாரங்கள்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்

சுரேஷ் சலேவின் மடிக்கணினிக்குள் மறைக்கப்படும் முக்கிய ஆதாரங்கள்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்

லஞ்சீட் பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

லஞ்சீட் பாவனையைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் சிறப்பாகச் செயலாற்றி வருவதாகவும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது சுற்றாடல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் மற்றும் லஞ்சீட் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் தரமற்ற சொப்பிங் பைகள், ஒரு நாள் பாவனைக்குரிய பிளாஸ்டிக் கப்கள் மற்றும் லஞ்சீட் என்பன இரகசியமாக விற்பனை செய்யப்படுவதாகச் சுகாதார மருத்துவ அதிகாரிகளால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் லஞ்சீட் பாவனையைக் கட்டுப்படுத்த ஆளுநர் நா.வேதநாயகன் நடவடிக்கை! | Governor Vedhanayakan Action Control Polythene

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களின் உரிமங்களை ரத்துச் செய்ய உள்ளூராட்சி மன்றங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள புதிய சுற்றாடல் சட்டவரைவு நடைமுறைக்கு வந்ததும், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்துவதில் மேலும் இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் எல்.சி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, நல்லூர் பெருந்திருவிழா உள்ளிட்ட ஆலய உற்சவக் காலங்களில் பொலித்தீன் மற்றும் ஒரு நாள் பிளாஸ்டிக் கப்களின் பாவனையை முற்றாகக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும், யாழ். மாநகர சபை கடைகளுக்கான அனுமதியை வழங்கும்போது இதனை ஒரு கட்டாய நிபந்தனையாக விதிக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நாய்களுக்கான கருத்தடைச் சிகிச்சை

கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட பெண் நாய்களுக்கான கருத்தடைச் சிகிச்சையை இந்த ஆண்டும் தொடர்வது குறித்துக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

இதற்கான நடைமுறைகளை வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

சுமார் 15,000 நாய்களுக்குச் சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்துகள் கைவசம் தயாராகவுள்ள நிலையில், இந்த முறை பெண் நாய்களுடன் சேர்த்து ஆண் நாய்களுக்கும் சமாந்தரமாகக் கருத்தடைச் சிகிச்சையை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் லஞ்சீட் பாவனையைக் கட்டுப்படுத்த ஆளுநர் நா.வேதநாயகன் நடவடிக்கை! | Governor Vedhanayakan Action Control Polythene

மாகாண சுகாதாரத் திணைக்களமும் தனியானதொரு கருத்தடைத் திட்டத்தை முன்னெடுப்பதால், இரு திணைக்களங்களும் ஒருங்கிணைந்து பிரதேசங்களைப் பகிர்ந்தளித்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளன.

இந்தத் திட்டத்தை முன்னெடுக்கும் போது கடந்த ஆண்டு சில இடங்களில் பொதுமக்களின் எதிர்ப்பு எழுந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, சட்டரீதியான ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பின் அவசியம் குறித்துப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னரே அடுத்த மாதம் முதல் இந்தத் திட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாய்களைப் பிடிப்பவர்கள் உள்ளிட்ட இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய பணியாளர்களுக்கான தடுப்பூசிகளை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அபிவிருத்தித் திட்டங்கள் 

உள்ளூராட்சி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி குளங்கள் மற்றும் சுற்றுவட்ட வீதிகளை அழகுபடுத்துவதற்குப் பெருநிறுவனங்களின் கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு நிதியைப் பெற்றுக்கொள்வது அல்லது வர்த்தக சங்கங்களின் உதவிகளை நாடுவது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஆளுநரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி அமைச்சின் வீட்டுத்திட்டங்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அமைச்சின் திடீர் கண்காணிப்புக் குழுவால் கண்டறியப்பட்ட குறைபாடுகளும் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் மற்றும் லஞ்சீட் பாவனையைக் கட்டுப்படுத்த ஆளுநர் நா.வேதநாயகன் நடவடிக்கை! | Governor Vedhanayakan Action Control Polythene

உள்ளூராட்சித் திணைக்களத்துக்குப் புதிய பொறியியலாளர்கள் இணைக்கப்பட்டதன் பின்னர் அபிவிருத்தி வேலைகள் விரைவாகவும் சீராகவும் நடைபெறுவதாக உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மாகாணப் பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோருக்கு அறிவிக்காமல், சில திட்டங்கள் நேரடியாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படுவது குறித்து உதவி ஆணையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான முறையற்ற ஒதுக்கீடுகளைத் தவிர்க்கும் வகையில், சம்மந்தப்பட்ட திட்டப் பணிப்பாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு பிரதம செயலாளரை ஆளுநர் பணித்துள்ளார்.

கிராமங்களுக்கான அடிப்படைத் தேவை

வவுனியா - செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் அண்மையில் மேற்கொண்ட களப் பயணத்தை நினைவுகூர்ந்த ஆளுநர், அங்குள்ள சில கிராமங்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாகக் கவலை வெளியிட்டுள்ளார்.

அந்த கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றுமாறு உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

வீதி அபிவிருத்தி மற்றும் ஏனைய திட்டங்கள் ஊர்காவற்றுறை - கண்ணகி அம்மன் இறங்குதுறை வீதியின் புனரமைப்புப் பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவடையும் எனவும், இறங்குதுறையின் புனரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் எனவும் வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் மற்றும் லஞ்சீட் பாவனையைக் கட்டுப்படுத்த ஆளுநர் நா.வேதநாயகன் நடவடிக்கை! | Governor Vedhanayakan Action Control Polythene

இதனைத் தொடர்ந்து, காணி ஆணையாளர் அலுவலகம், கிராமிய அபிவிருத்தித் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், சுற்றுலா அபிவிருத்திப் பணியகம் மற்றும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ஆகியவற்றின் செயற்றிட்ட முன்னேற்றங்களும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

தகவல் அறியும் உரிமை மற்றும் வெளிப்படைத்தன்மை கூட்டத்தின் நிறைவில், பிரதிப் பிரதம செயலாளர்களால் (நிதி, பொறியியல் மற்றும் நிர்வாகம்) சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் வழிகாட்டல்களுக்கு அமைய, மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களின் விவரங்களும் கட்டாயமாக உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் லஞ்சீட் பாவனையைக் கட்டுப்படுத்த ஆளுநர் நா.வேதநாயகன் நடவடிக்கை! | Governor Vedhanayakan Action Control Polythene

இந்த விசேட மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகர சபைகளின் ஆணையாளர்கள், காணி ஆணையாளர், நகர சபைகளின் செயலாளர்கள், வீதி அபிவிருத்தி, கிராமிய அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் பணிப்பாளர், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர், வீதி அபிவிருத்தித் திணைக்கள மாவட்டப் பொறியியலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

ரஷ்ய எண்ணெய் கிடங்கில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் பாரிய தீ விபத்து

ரஷ்ய எண்ணெய் கிடங்கில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் பாரிய தீ விபத்து

எல் - நினோ நிலைமை! ஜனாதிபதி தலைமையில் பலசுற்று பேச்சுவார்த்தை - தயாராகும் திட்டங்கள்

எல் - நினோ நிலைமை! ஜனாதிபதி தலைமையில் பலசுற்று பேச்சுவார்த்தை - தயாராகும் திட்டங்கள்

மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US