தமிழ் பொது வேட்பாளரின் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக கருத்துரைத்த தமிழ் தலைவர்கள்
புதிய இணைப்பு
நாம் எவ்வாறான கருத்துக்களைக் கூறினாலும் மக்கள் புறக்கணிப்பதா இல்லையா என தீர்மானிப்பார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மக்கள் மன்றில் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் எனும் தலைப்பில் அறிவோர் ஒன்றுகூடும் அரசியற் கருத்துக்களம் யாழ்ப்பாணத்தில்(jaffna) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்
ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் 17 தொடக்கம் இடம்பெறும் இதில் தமிழ் மக்கள் மத்தியில் பொது வேட்பாளர் தொடர்பில் சாதக பாதக விடயங்கள் ஆராயப்படுகின்றது.
பொது வேட்பாளர் தொடர்பாக எனது பார்வையில் தமிழ் வேட்பாளர்களை எவ்வாறு அணுகுவது தொடர்பான விடயம் உள்ளது.
இந்நிலையில், நாம் பல காலமாக நிலை நிறுத்திய வேட்பாளர் தனிமைப்படுவார் என்கிற நிலைமையுள்ளது.
நாங்கள் பொது வேட்பாளருக்கு எதிரானவர்கள் அல்ல மக்கள் தீர்மானிக்கும் வகையில் கருத்துகளை சொல்கிறோம். மக்கள் இதனைத் தீர்மானிப்பார்கள் என சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
பொது வேட்பாளன் விடயத்தை நான் ஆதரிக்கவில்லை என பேராசிரியர் அருளானந்தம் சர்வேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
சர்வஜன வாக்கெடுப்பு
உலகில் இரண்டு வகையான சர்வஜன வாக்கெடுப்புகள் உள்ளன. இதற்கு ஸ்பெயினில் நடந்த வாக்கெடுப்பைக் கூறலாம்.
ஐனாதிபதி தேர்தலி்ல் சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் இரண்டில் ஒரு முடிவில் இருப்பார்கள்.
ஜனாதிபதித் தேர்தலுக்கும் சர்வஜன வாக்கெடுப்பிற்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது.
தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த உடன்படவில்லை எமது எதிர்பைக்காட்டும் வகையிலான வாக்கினை எடுக்க வேண்டும். தமிழ் பொது வேட்பாளர் வடக்கு கிழக்கில் உள்ள மொத்த வாக்குகளில் கணிசமான வாக்கினைப் பெறுபவராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட குடியேற்றங்கள்
எமது எல்லைகளில் பயங்கரமான திட்டமிட்ட குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன அதிலிருந்து எவ்வாறு தமிழ் மக்களை பாதுகாப்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தள்ளார்.
இந்நிலையில், எனது தனிப்பட்ட கருத்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சிகளாக ஒன்று சேர்ந்து முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதே ஆகும்.
எம்மைப்பற்றி சிந்திக்காத எந்த கட்சிக்கும் நாம் வாக்களிக்க மாட்டோம் என சட்டத்தரணி நல்லதம்பி ஸ்ரீகாந்தா குறிப்பிட்டுள்ளார்.
கட்சிகளோ, அரசியல்வாதிகளோ பிரச்சனை அல்ல பெரும்பான்மையான இனத்திற்கு நாம் என்ன செய்ய வேண்டும். எமைப்பற்றி சிந்திக்காத எந்த கட்சிக்கும் நாம் வாக்களிக்க மாட்டோம். சர்வதேச வகிபாவம் ஆரோக்கியமாக இருக்கும் போது எமது சிங்கள தலைவர்கள்
எவருக்கும் வாக்களிக்க மாட்டோம்.
நாம் கட்சியாக மட்டும் பிரிந்துள்ளோம். ஆனால் நாம் பிரியவில்லை பல்லவன், சோழன் காலத்திலிருந்து தமிழர்கள் இவ்வாறு தான் உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
குறித்த கருத்துக்களமானது, நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின்(M. A. Sumanthiran) ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று(09.06.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு அகவணக்கம்
இந்நிகழ்வின் ஆரம்பமாக இமானுவேல் அடிகளாரினால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள் கல்விமான்கள், புத்திஜீவிகள் பொது மக்கள் என பலநூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |