இலங்கையில் அரச ஊழியர்களுக்கான மாதாந்த வேதனத்தை செலுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
அரச ஊழியர்களுக்கு மாதாந்த வேதனத்தை செலுத்த போதிய வருமானம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
நிதி நெருக்கடி
நிதி நெருக்கடி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் வருவாய் தேக்கமடைந்துள்ளதால், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய பாரியளவிலான கொடுப்பனவுகளை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களுக்கு செலுத்த வேண்டியுள்ள பணம்
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களுக்கு நூறு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலுத்த வேண்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் பிரகாரம் நிதி ஒழுக்கத்தை பேண வேண்டும் என்ற நிபந்தனை இருந்த போதிலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பணத்தை அச்சிட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam