அரச- தனியார் ஊழியர்கள் செலவிற்கு பணம் இன்றி திண்டாட்டம்! ஆபத்தாகும் அடுத்து வரும் மாதங்கள்! (Video)
புதிய வரிமுறைமையின் கீழ் வரி செலுத்த கடமைப்பட்டுள்ள அரச தனியார் ஊழியர்களுக்கு எதிர்வரும் மாதங்கள் மிகவும் சிக்கலாக அமையும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
"மாதம் ஒரு லட்சம் ரூபா சம்பளம் பெறுபவர்களை விட அதற்கு மேலதிகமான சம்பளம் பெறும் அனைவரும் புதிய வரிமுறைமையின் கீழ் வரி செலுத்த கடமைப்பட்டுள்ளார்கள்.
இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் தனியார் துறையில் அதிக்கூடிய சம்பளம் பெறுபவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு சம்பளம் கூடுதலாக கிடைத்தாலும் அவர்களுடைய கொள்வனவு சக்தி
வீழ்ச்சியடைந்துள்ளது. பணவீக்கம் 70 வீதமாக இருக்கின்றது. பலர் கடன்களை பெற்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கடன்களை மீள செலுத்த வேண்டும். அவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது ஆகவே அதனை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை.
எனவே இந்நிலையில் அரசாங்கம் வரியை அதிகரித்தால் இது பலருக்கும் ஆபத்தாக அமையும்" என்கிறார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளக்கம் Cineulagam
