கடமைகளை நிறைவேற்றுவதில் அரச ஊழியர்களுக்கு முழு சுதந்திரம்.. பிரதி அமைச்சர் தெரிவிப்பு

Government Employee Government Of Sri Lanka Arun Hemachandra
By Kiyas Shafe Jul 08, 2025 02:25 PM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

in சமூகம்
Report

இலங்கையின் அரசியல் வரலாற்றில், அரசியல் தலையீடுகள் இல்லாமல் அரச ஊழியர்கள் சுதந்திரமாகவும், சட்டப்பூர்வமாகவும் தங்கள் கடமைகளைச் செய்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். 

கந்தளாய் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூடடம் நேற்று (07), கந்தளாய் பிரதேச செயல கேட்போர் கூடத்தில், அவரது தலைமையின் கீழ், நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், "கந்தளாய் சூரியபுரயில் உள்ள மகாவலி ஆற்றின் சிறிமங்கல பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதற்கு அனுமதி வழங்கியது யார் என்றும் கேள்வி எழுப்பினார்.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் மரணம்! டக்ளஸூக்கு ஏற்பட்டுள்ள கவலை

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் மரணம்! டக்ளஸூக்கு ஏற்பட்டுள்ள கவலை

அதிகளவான செலவுகள் 

இந்த சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக, சூரியபுர, சமனலபாலம், சமகிபுர போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் வெள்ளப் பாதுகாப்பு அணை சேதமடைந்து வருவதாகவும், இந்த பாதுகாப்பு அணையை மீண்டும் புனரமைக்க அரசாங்கம் பெரும் செலவுகளைச் தற்போது செய்கின்றது என்றும் விவசாய அமைப்புக்களிடம் கூறி வைக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

கடமைகளை நிறைவேற்றுவதில் அரச ஊழியர்களுக்கு முழு சுதந்திரம்.. பிரதி அமைச்சர் தெரிவிப்பு | Government Staffs Arun Hemachandra

கந்தளாய் பேராறு பகுதியில் உள்ள வடிகான் அப்பகுதி மக்கள் வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் காணப்படுவதாகவும், இதற்கான தீர்வுகள் காலம் தாழ்த்தப்படுவது ஏற்க முடியாதது என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கந்தளாய், சூரியபுர மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை தாக்குதல் அதிகரித்ததன் காரணமாக, விவசாயிகள் அச்சத்தில் வாழ்கிறார்கள். பயிர்கள் அழிவதுடன், மனித உயிர்களும் அபாயத்தில் உள்ளன. இது குறித்து வனவள பாதுகாப்பு திணைக்களம் உடனடியாக செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தற்போது பிரதேச மக்களால் முன்வைக்கப்படுகின்ற, சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பான உண்மை நிலைகளை பரிசீலிக்குமாறும், அது சம்பந்தமான முழுமையான அறிக்கையை அடுத்த பிரதேச குழு கூட்டத்திற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு புவியியச் சரிதவியல் பொறியியலாளரை அறிவுறுத்தினார்.

அதேவேளை இதன்போது, சட்டவிரோத மதுபான உற்பத்தி நடைமுறையில் இருப்பது தொடர்பாகவும் இங்கு பேசப்பாட்டதோடு, கந்தளாய் வைத்தியசாலையின் சேவைகள், மருந்து பற்றாக்குறை, மருத்துவ உபகாரணங்கள் மற்றும் பணியாளர்கள் குறித்த முந்திய கோரிக்கைகள் என பல பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ஆங்கிலம் தெரியாமல் சர்வதேச மாநாட்டில் தடுமாறிய ஆளும் தரப்பு உறுப்பினர்

ஆங்கிலம் தெரியாமல் சர்வதேச மாநாட்டில் தடுமாறிய ஆளும் தரப்பு உறுப்பினர்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW   
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US