தபால் துறையை நவீனமயப்படுத்த அரசு விசேட திட்டம் - ஜனாதிபதி செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல்

Sri Lanka Politician Sri Lanka Government
By Rakesh Aug 08, 2026 04:05 AM GMT
Report

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் தொடக்கப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் தபால் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(07.08.2026) நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் ஜூலை 09 ஆம் திகதி சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் 2027 வரவு - செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலின் போது வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய, தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதில் நிலவும் தற்போதைய சிக்கல்களைக் கண்டறிவதையும், தபால் சேவையை மிகவும் செயற்திறனான மற்றும் இலாபகரமான சேவையாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் மற்றும் ஆற்றல்களைக் கண்டறிவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நவீனமயமாக்கப்படும் தபால் சேவை

தற்பொழுது தபால் திணைக்களம் வங்கி மற்றும் காப்புறுதி நிறுவனங்களுடன் இணைந்து நிதிச் சேவைகள், சம்பிரதாய தபால் சேவைகள் மற்றும் பொருட்கள் விநியோகம் ஆகிய மூன்று பிரதான வழிகளில் தனது சேவைகளை வழங்குவதாக தபால் மா அதிபர் எஸ். ஆர். டப்ளியூ. எம். ஆர். பி. சத்குமார இங்கு சுட்டிக்காட்டினார்.

தபால் துறையை நவீனமயப்படுத்த அரசு விசேட திட்டம் - ஜனாதிபதி செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் | Government Special To Modernize Postal Sector

பொருள்கள் விநியோகத்திற்கான பெரும் சாத்தியக்கூறும் சந்தை வாய்ப்பும் தற்போது உருவாகியுள்ளது என்றும், சந்தை வாய்ப்புகளில் 10-15 வீத பங்களிக்கும் அந்தச் சேவைகளை விரைவாக விரிவுபடுத்த வாய்ப்புள்ளது என்றும் தபால் மா அதிபர் இங்கு தெரிவித்தார்.

குறிப்பாக அதற்கு, வர்த்தக முடிவுகளை எடுக்கும் திறனை அதிகரித்தல், இலாபகரமான சேவைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற மறுசீரமைப்பு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய தபால் மா அதிபர், இந்த நோக்கத்திற்காக திறைசேரியுடன் இணைந்து தற்போது ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

உலக தபால் சேவை, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களுக்கு முகங்கொடுத்து, நவீன விடயங்களுடன், தன்னை மாற்றிக்கொண்டு அபிவிருத்தியில் முன்னேறியுள்ளது என்று ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார். 

தபால் துறையை நவீனமயப்படுத்த அரசு விசேட திட்டம் - ஜனாதிபதி செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் | Government Special To Modernize Postal Sector

தபால் துறையை நவீனமயப்படுத்த அரசு விசேட திட்டம் - ஜனாதிபதி செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் | Government Special To Modernize Postal Sector

ஷானி அபேசேகர பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு

ஷானி அபேசேகர பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை! ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் உறுதி

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை! ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் உறுதி



மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US