அரச சேவைகளை பிரதேசங்கள் வரை கொண்டு செல்லுங்கள்:ஜனாதிபதியின் யோசனை
அனைத்து அரச சேவைகளையும் மாவட்டங்கள் மற்றும் பிரதேச மட்டத்திற்கு பரவலாக்கும் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்பதிவுத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்,மோட்டார் போக்குவரத்து திணைக்களம் போன்ற நிறுவனங்களை மாவட்டங்கள் மற்றும் பிரதேச மட்டங்களுக்கு பரலாக்குவதன் மூலம் அவற்றின் சேவைகளை மிகவும் வினைத்திறனாக வழங்க முடியும் என ஜனதிபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இளைஞர்கள் பயிர் செய்கையில் ஈடுபட அரச காணிகள்

இலங்கையில் அறுவடை செய்யப்படும் உணவு மற்றும் காய்கறிகள் விநியோகத்தின் போது 40 வீதம் அழிந்து போகின்றன. இதனால், உணவு பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அரசுக்கு சொந்தமான பயிரிடப்படாமல் இருக்கும் காணிகளை பயிர் செய்கைகளுக்காக இளைஞர்களுக்கு வழங்குவது தொடர்பாகவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சூரிய ஒளி மின் உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் நிலவும் மின்சார பிரச்சினைக்கு துரிதமான தீர்வுகளை வழங்க நிறுவனங்கள் மட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.