அரசாங்கத்தின் புதிய அணுகுமுறை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி விசனம்
அரசாங்கத்தின் புதிய அணுகுமுறை மிகவும் கவலைக்குரியதாகவுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறைந்த விலையில் மதுபானம்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''மக்களுக்கு விஷத்தை வழங்கியாவது வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையா?
சட்ட விரோத மதுபானத்துக்கு பதிலாக குறைந்த விலையில் மதுபானத்தை தயாரிக்கப் போவதாக அமைச்சரொருவர் தெரிவித்துள்ளமை எந்தவகையில் ஏற்றுக்கொள்ள கூடிய கருத்தாகும்.
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாகக் கூட சட்ட விரோத மதுபானம் உள்ளிட்டவற்றைக் அழிக்கலாம். அதனை விடுத்து குறைந்த விலையில் மதுபானத்தை தயாரிப்பது சமூகத்தில் பாரிய சீரழிவுகளுக்கு வழிவகுக்கும்.
மக்களின் அத்தியாவசிய தேவை
குறைந்த விலையில் மதுபானத்தை பெற்றுக் கொள்வதற்காக சீனியில் உற்பத்தி செய்யப்படும் எதனோல் மூலம் மதுபானத்தை தயாரிக்கவுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகின்றார்.
சட்டவிரோத மதுபானங்களை ஒழிப்பதற்காக குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக் கூடிய மதுபானத்தை அரசாங்கமே தயாரிப்பது தான் மாற்று வழியா? இதுவா அரசாங்கத்தின் கொள்கை?
மக்களின் அத்தியாவசிய தேவை இதுவல்ல. மக்களின் வருமான வழியை அதிகரித்து, அவர்களின் வாழ்க்கை செலவை குறைப்தே அரசாங்கத்தின் பிரதான கடமையாகும்.''என தெரிவித்துள்ளார்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri
