சர்வதேச நாணய நிதியம் தொடர்பாக கொழும்பில் கூட்டம்
சர்வதேச நாணய நிதியம் தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் கூட்டமொன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது சமூக ஊடக கணக்கில் ஒரு இடுகையின் மூலம் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த இடுகையில், சர்வதேச நாணய நிதியம் தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
கூட்டத்துக்கு அழைப்பு
மேலும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தாம் ஏற்பாடு செய்யவிருந்த விரிவுரை ஒன்று அரசாங்கத்தின் பலமான தலையீட்டினால் இரத்துச் செய்யப்பட்டதாக அவர் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், சோசலிச சமத்துவக் கட்சி, முன்னாள் சமூகவாத சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றிற்கும் குறித்த கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |