நெல் கொள்வனவில் அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை
விவசாயிகளிடமிருந்து நியாய விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த செயற்பாட்டின் ஊடாக நெல் கொள்வனவு பணிகளை அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று (18.09.2026) மேற்கொண்டிருந்தனர்.
நெல் சந்தைப்படுத்தல் சபை தவிர்ந்து சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு மாவட்ட செயலகம் மூலம் முதற்கட்டமாக 25 மில்லியன் ரூபா வழங்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நியாய விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையிலேயே இதற்கான நடவடிக்கை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

நெல் கொள்வனவு
கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள், விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் முன்னிலையில் குறித்த நெல் கொள்வனவு இடம்பெற்றது.
குறித்த நெல் கொள்வனவு தொடர்பாக நெல் உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், முன்பு எந்த அரசாங்கத்தாலும் மேற்கொள்ளப்படாத நடவடிக்கையை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையினர் களஞ்சியங்கள் பற்றாக்குறை காரணமாக நெல் கொள்வனவினை நிறுத்தியதை அடுத்து தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எந்த அரசாங்கமும் வழங்காத 25 மில்லியன் ரூபாய் நிதியினை எந்த வட்டியும் இன்றி வழங்கி விவசாயிகளிடம் நெல்லினை அரச விலைக்கு கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதேபோன்று இனி வரும் காலங்களில் குறித்த நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து! கடும் கோபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் - சாரதியின் பரபரப்பு வாக்குமூலம்