எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இந்திய நிறுவனங்களிடமிருந்து மருந்து கொள்வனவு
இலங்கையின் தடுப்புப் பட்டியலில் உள்ள நிறுவனங்களில் இருந்து மருந்துக் கொள்வனவை சுகாதார அமைச்சு கைவிட்டுள்ளது என அமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஏனைய இந்திய நிறுவனங்களிடமிருந்து மருந்து வாங்குவதற்கான செயல்முறையை சுகாதார அமைச்சு தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளது.
கடந்த செவ்வாயன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது தொழில்முறை கல்லூரிகள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் அமைச்சின் அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு ஒழுங்குமுறை கட்டமைப்பு
இதன் அடிப்படையில் அரச மருத்துவமனைகளுக்கான 300க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கான கொள்வனவுக் கட்டளைகள் இப்போது பல இந்திய நிறுவனங்களிடையே பிரித்து வழங்கப்படவுள்ளன.
இதற்கிடையில் உள்நாட்டு ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு வெளியே மருந்துகளை கொள்வனவு செய்வதை இலங்கை மருத்துவ சங்கம், இலங்கை மருத்துவர்கள் கல்லூரி, இலங்கை சத்திரசிகிச்சை கல்லூரி, இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் கல்லூரி, ஸ்ரீலங்கா குழந்தை மருத்துவர்களின் கல்லூரி மற்றும் இலங்கை மருத்துவ மருந்தியல் சங்கம், இலங்கை மருந்தக கைத்தொழில் சம்மேளனம் மற்றும் நோயாளிகளின் உரிமைகளுக்கான சங்கம் என்பன கடுமையான எதிர்க்கின்றன.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
