முல்லைத்தீவில் அரச உத்தியோகத்தரின் தங்க சங்கிலி திருட்டு
முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி, மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் புதுக்குடியிருப்பு உடையார் கட்டு குரவில் பகுதியில் இன்று (13.11.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் உடையார் கட்டு தெற்கு கிராம அலுவலகர் அலுவலகத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இருவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியினை அறுத்து சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
சுமார் இரண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலியே இவ்வாறு கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதையடுத்து சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam